இந்திய விமானப் படையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஏர்மேன் பணிக்குத் தேர்வு முகாம் தாம்பரத்தில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 நாள் வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம். தெலுங்கான மற்றும் பாண்டிச்சேரி ஆண்கள் கலந்துகொள்ளலாம்.
குரூப் y ஏர்மேன் பிரிவில் Medical Assistant பதவிக்குத் தேர்வு முகாமில் கலந்துகொள்ள 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பார்மசியில் டிகிரி/டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தேர்வு முகாம் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்வு முகாமில் கலந்துகொண்டு இந்திய விமானப்படை பணியில் சேர தேவையான விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
தேர்வு முகாம் நாள் | பங்குபெற வேண்டிய மாநிலங்கள் |
பிப்ரவரி 1 - 2 | தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி |
பிப்ரவரி 4 - 5 | கர்நாடகா, தெலுங்கான மற்றும் ஆந்திரப் பிரதேசம் |
பிப்ரவரி 7 - 8(Diploma / B.SCin Pharmacy) | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி |
வயது வரம்பு:
Medical Assistant trade : 27.06.2002 - 27.06.2006 (திருமணமாகாத ஆண்கள்)
Medical Assistant trade (with Diploma / B.Sc in Pharmacy) : திருமணமாகாத ஆண்கள் 27.06.1999 - 27.06.2004 தேதிக்குள் பிறந்தவர்கள் மற்றும் திருமணம் ஆனவர்கள் 27.06.1999 - 27.06.2002.
கல்வித்தகுதி:
இரண்டு பிரிவு கல்வித்தகுதி உடையவர்கள் கலந்துகொள்ளலாம்.
1. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி மற்றும் கூடுதலாக Diploma / B.SC in Pharmacy 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் முதல் கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத்தொடர்ந்து, உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Also Read : ரூ.69,000 வரை சம்பளம் : மத்திய தொழில் காவல் படையில் 450 ஓட்டுநர் பணியிடங்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs, Rally, Tambaram