இந்தியத் தபால் துறையில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்படும் நிலையில் எப்படித் தேர்வு செய்யப்படுவர் மற்றும் 10 ஆம் வகுப்புத் தேர்வைத் தனி தேர்வர்களாக எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாமா என்ற விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.
இந்திய அஞ்சல் துறையில் தற்போது கிராமின் டாக் சேவாக் (GDS) பணியில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தாக் சேவாக் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் காலியாகவுள்ள 40,899 பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு முந்திய கட்டுரைகளில் சம்பள விவரங்கள் மற்றும் வயது வரம்பு போன்ற விவரங்கள் இடம்பெற்று இருந்தன.
கணினி வழியில் தேர்வு:
கணினி வழி தேர்வு என்றால் விண்ணப்பதார்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை. விண்ணப்பதார்கள் விண்ணப்படிவத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும். எந்த ஒரு தனி நபரின் ஈடுபாடும் இன்றி உள்ளிட்ட தகவலின் அடிப்படையில் கணினி வழியில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். குறிப்பாகக் கூறவேண்டும் என்றால், விண்ணப்பதார்கள் உள்ளிடும் மதிப்பெண்களின் அடிப்படையில் கணினி முறையாக வகுக்கப்பட்டுள்ள system generated merit list வெளியிடப்படும்.
அதில் இட ஒதுக்கீடு, காலிப்பணியிடங்கள் மற்றும் விண்ணப்பதார்களில் பணி விருப்பங்கள் ஆகியவற்றைக் கருத்தின் கொண்டு கணினி கணக்கிட்டு தகுதியானவர்களின் பட்டியலை வெளியிடும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எப்படிக் கணக்கிடப்படும்?
அனைத்து வகை பள்ளிக் கல்வி முறைகளின் படித்த மாணவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் தமிழ்நாடு பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தமிழ் மொழியைக் கண்டிப்பாக 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Grades/Points அடிப்படையில் நிரப்பப்படும் மதிப்பெண்களும் marks ஆக மட்டும் தான் கணக்கிடப்படும்.
மதிப்பெண்களாகக் கணக்கிடப்பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்வு செய்யப்படுவர். Grades/Points அடிப்படையில் மட்டும் உள்ள 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 9.5 என்ற எண்ணுடன் பெருக்கப்பட்டு marks முறையில் மாற்றப்படும். CGPA மதிப்பெண்களுக்கும் இந்த முறையே கணக்கிடப்படும். மேலும் மதிப்பெண்கள் இடம்பெற்ற சான்றிதழ் பெற்றவர்கள் marks மட்டும் பதிவிடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாமா?
10 ஆம் வகுப்புத் தேர்வை சில பேர் பள்ளி செல்லாமல் தனித் தேர்வர்களாக எழுதுவது உண்டு. அவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாமா என்றால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக் கல்வித் தேர்வு முறைக்குக் கீழ் ஏதேனும் போர்டில் 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதுபவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் தான்.
Also Read : தமிழ்நாடு அஞ்சல்துறையில் 3,167 காலியிடங்கள்: சம்பளம் என்ன? உங்களுக்கு செட் ஆகுமா?
தேர்வு செய்யப்பட்டத்தை அறிந்துகொள்வது எப்படி?
கணினி வழியில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு குறிச்செய்தி / இமெயில் மூலம் தேர்வு செய்யப்பட்டதற்கான தகவல் அளிக்கப்படும். மேலும் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் சான்றிதழ்களின் உண்மையான ஆவணங்களை நேரில் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 16 ஆம் தேதியே இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.