முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. லிங்க் இதோ

தமிழ்நாடு அஞ்சல்துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. லிங்க் இதோ

அஞ்சல் துறை பணி

அஞ்சல் துறை பணி

இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பபங்கள் பெறப்படும். எனவே, தேர்வர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழ்நாடு கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் இன்றுடன் நிறைவடைகிறது.

கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருவதால், ஏற்கனவே அளிக்கப்பட்ட  indiapostgdsonline.gov.in என்ற லிங்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது indiapostgdsonline.cept.gov.in  என்ற புதிய லிங் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பபங்கள் பெறப்படும். எனவே, தேர்வர்கள் இந்த புதிய லிங்க் மூலம்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் உள்ளூர் மொழிப் பாடங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், கண்டிப்பாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டும் நபராகவும் இருக்க வேண்டும்.

இந்த பதவிக்குவிண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 16.03.2023 அன்று, 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையும், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டுகள் வரையும், மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் கோரலாம்

விண்ணப்பம் செய்வது எப்படி? https://indiapostgdsonline.cept.gov.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முகப்பு பக்கத்தில், step 1 Registration பகுதியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த பகுதியில் சமர்பிக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்-ஐ சமர்ப்பிப்பது நல்லது.

பிறகு, step 2 - Apply Online ஐ கிளிக் செய்து, 10ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள், காலியிடங்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் நிரப்ப வேண்டும். அதன்பிறகு, விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை

இதையும் வாசிக்க: கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்கள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

தேவைப்படும் ஆவணங்கள்: ஆன்லைன் விண்ணப்பத்துடன் சமீபத்திய புகைப்படம் (50 kbக்கு மிகாமல்), கையொப்பம் (50 kbக்கு மிகாமல்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு முன்னுரிமை: 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Tamil Nadu Government Jobs