வேலை தேடுபவரா நீங்கள்? இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்
வேலை தேடுபவரா நீங்கள்? இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்
மாதிரிப் படம்
வேலை தேடும் நபர்கள் இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர் கீழ்காணும் வேலைகளின் பட்டியலை படித்து பயன்பெறலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி , BEL நிறுவனம் , காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக வேலை , சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா , தமிழக பள்ளி கல்வித் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் மட்டுமே கடைசி தேதியாக உள்ளது. இந்த வேலைகளுக்கான விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி வேலை :
இந்திய ரிசர்வ் வங்கி இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் (IGIDR)க்கான இயக்குனரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
Reserve Bank of India
காலியாக உள்ள வேலையின் பெயர்
Director on IGIDR
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.06.2022
கல்வித் தகுதி விவரம்
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்து வருடம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
30.06.2022 தேதியின்படி விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்
ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
IGIDR Search Committee 2022,
C/o Corporate Strategy & Budget Department, Central Office,
Reserve Bank of India,Main Building,
2nd floor, ShahidBhagat Singh Marg,
Mumbai 400001.
RBI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
RBI இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் தற்போதைய காலியிடங்கள் > (Select Current Vacancies > )காலியிடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் உள்ளது.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த பின்னர் அதன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். Project Engineer பணிக்கு மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
Bharat Electronics Limited
காலியாக உள்ள வேலையின் பெயர்
Project Engineer (Electronics)
விண்ணப்பிக்க கடைசி தேதி
28/06/2022
சம்பள விவரம்
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக முதலாம் ஆண்டு ரூ. 40,000/- , இரண்டாம் ஆண்டு ரூ. 45,000/- , மூன்றாம் ஆண்டு ரூ. 50,000/- , 4ம் ஆண்டு 55,000/- சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விவரம்
BE/B.Tech படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
பிற தகுதிகள்
2 வருடம் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் அனுபவம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் 01.05.2022 அன்றைய தேதியின்படி 32 வயதை கடந்திருக்க கூடாது.
மொத்த காலிப்பணியிட விவரம்
10 காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் Written Test , Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
Gandhigram Rural Institute (GRI Dindigul)
காலியாக உள்ள வேலையின் பெயர்
Driver
விண்ணப்பிக்க கடைசி தேதி
30/06/2022
சம்பள விவரம்
ரூ.615/- ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விவரம்
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் / கல்வி நிலையங்களில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
பிற தகுதிகள்
Driver பணி - கட்டாயம் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் காந்தி கிராமம் , திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவராக அல்லது காந்தி கிராமத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம்.
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 25 அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்
பல காலியிடங்கள் உள்ளன
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி
30/06/2022
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரம் (CV, Biodata), தேவையான சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது எடுத்து வரவேண்டும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
Central Bank of India
காலியாக உள்ள வேலையின் பெயர்
Faculty & Counselor FLCC
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
06/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி
24/06/2022
சம்பள விவரம்
ரூ.20,000/-
கல்வித் தகுதி விவரம்
விண்ணப்பதாரர்கள் முதுகலை முடித்திருக்க வேண்டும். அதாவது எம்.எஸ்.டபிள்யூ/ எம்.ஏ கிராமப்புற மேம்பாடு/எம்.ஏ சமூகவியல்/உளவியல்/பி.எஸ்.சி (அக்ரி)/பி.ஏ மற்றும் பி.எட். முதலியன மற்றும் கணினி அறிவுடன் கற்பிக்கும் திறமை வேண்டும்.
பிற தகுதிகள்
விண்ணப்பதாரர் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம்
பல காலியிடங்கள் உள்ளன
விண்ணப்பிக்கும் முறை
OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Application for the post of Faculty at RSETI centre on contract for the year 2022-23” to Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office, 1 St Floor, Central Bank Of India Patel Chauk, Near Head post Office, Siwan, Bihar Pin Code: 841226.
தமிழக பள்ளி கல்வித் துறை (Tamil Nadu School Education Department) Senior Fellows & Fellows பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை
தமிழக பள்ளி கல்வித் துறை (Tamil Nadu School Education Department)
காலியாக உள்ள வேலையின் பெயர்
Senior Fellows & Fellows
பணியிடம்
தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி
30/06/2022
சம்பள விவரம்
Fellowship (TNEF)
ரூ.32,000/-
Senior Fellow
ரூ.45,000/-
கல்வித் தகுதி விவரம்
Fellowship (TNEF)
ஏதாவது ஒரு துறையில் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
Google Suite, MS Word, Excel and PowerPoint ஆகியவற்றில் நல்ல அறிவு இருக்க வேண்டும்.
பல்வேறு சமூக வலைத்தளம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
வெளியில் பயணம் செய்ய விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். (district for programme
related activities)
Senior Fellow
5+ ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Google Suite, MS Word, Excel மற்றும் PowerPoint பற்றிய வேலை அறிவு இருக்க வேண்டும்.
பல்வேறு சமூக ஊடக தளங்களைப் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அவற்றின் பயன்பாடு இருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச, படிக்க மற்றும் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும்.
தொகுதி/மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க விருப்பம்
உடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.