Job Vacancy : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

அரசு மத்திய அச்சகத்தில் (Government Central Press) Fitter பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • Share this:
    அரசு மத்திய அச்சகம் (Government Central Press) தமிழகத்தில் சென்னையில் உள்ள அச்சகம் ஆகும். இங்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறை உள்ளது. இந்த அச்சகத்தில் மாநில அரசின் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அரசுப் பதிவுகளை பராமரிக்கும் பணியும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அச்சகத்தின் கட்டுப்பாட்டில் எட்டு கிளை அச்சகங்கள் மற்றும் எழுதுபொருள் கடைகள் இயங்கி வருகின்றன. இதற்கான கிளை அச்சகங்கள் மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, விருத்தாசலம், மற்றும் மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்ற கட்டிடங்களில் இயங்கி வருகின்ற அரசு கிளை அச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தின் அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்து வருகிறது.

    பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை அனைத்து வகையான சான்றிதழ்களையும் இது அச்சிடுகிறது. அனைத்திற்கும் மேலாக உரிய காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் உரிய நேரத்தில் உரிய துறைக்கு அனுப்பி வருகிறது. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்































    நிறுவனம் அரசு மத்திய அச்சகம் (Government Central Press)
    பணி Fitter


     

    காலிப்பணியிடங்கள்
    04
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


     

    கல்வி தகுதி
    10th Pass
    சம்பள விவரம் ரூ. 7,000/ – 8,050/-
    விண்ணப்ப கட்டணம் No Fee

    விருப்பம் உடையவர்கள் இந்த லிங்கில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம்
    https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60d9b32c8efcd777886d0e6a
    Published by:Sankaravadivoo G
    First published: