திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்
தகவல் தொகுப்பாளர் (Data Analyst) (முற்றிலும் ஓராண்டு கால தொகுப்பூதிய அடிப்படையில்)
கல்வித்தகுதி
BA / BCA / B.Sc. Statistics / B.Sc. Mathematics (10+2+3
Pattern) இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
அனுபவம்
ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக 2 வருட அனுபவம் பெற்றிருத்தல்
வேண்டும்.
மேற்கண்ட பணியிடம் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரும் முற்றிலும் தற்காலிகமான ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையிலான பணியிடமாகும். இது
மத்திய மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட
பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தங்கள் விண்ணப்பங்கள் அனைத்து கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் 17.06.2022 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
அறை எண்: 633 - 6வது தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண்.0421-2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியான https://tiruppur.nic.inஎன்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.