• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ஒரு வருகைக்கு ரூ.1,000/- சம்பளம்... Counsellors பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : ஒரு வருகைக்கு ரூ.1,000/- சம்பளம்... Counsellors பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Counsellors பணி

Counsellors பணி

தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துனர்களுக்கு ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 /-வழங்கப்படும்.பெண்கள் விண்ணப்பிக்கலாம்

  • Share this:
    அரசாணை எண்.நிலை.86 சமூக நலன் மற்றும் சத்துணவுதிட்டத்துறை, நாள் 25.11.2016ன் படி தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் (சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ) மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற பெண்கள் மட்டும் அவர்களது விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் ஒளிநகலுடன் 10.09.2021 க்குள் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும்படி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துனர்களுக்கு வருகையின் அடிப்படையில் வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் வாரம் ஒருமுறை மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 /-வழங்கப்படும்.

    மேலும் விபரம் வேண்டுவோர் கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



































    நிறுவனம் Coimbatore Social Defense Department
    வேலையின் பெயர் Counsellors பணி
    காலிப்பணியிடங்கள் 09


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2021
    கல்வி தகுதி அரசு/ யுஜிசி அனுமதி பெற்ற கல்லூரிகளில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி
    சம்பள விவரம்  ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை சம்பளம்
    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், 1094, அவிநாசி சாலை, பாப்பநாயக்கன் பாளையம், கோயம்பத்தூர் - 641 037. தொலைபேசி - 0422 2244546

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/08/2021082665.pdf

     

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: