முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNTET Paper II Admit card: ஆசிரியர் தகுதித் தேர்வு : ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்வதில் சிக்கல் ஏன்?

TNTET Paper II Admit card: ஆசிரியர் தகுதித் தேர்வு : ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்வதில் சிக்கல் ஏன்?

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு

Teachers Eligibility Test (TNTET)– Paper-II-2022 Admit card: தேர்விடம் தொடர்பான அனுமதிச் சீட்டு (Venue Admit card ) திட்டமிட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளிற்கான கணினி வழித் தேர்வு தேதி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் இரு தினங்களுக்கு முன்னதாக வெளியிட்டது. இந்நிலையில், இந்த அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்று தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ( 6ம் முதல் 8ம் வகுப்பு) தேர்வு செய்யும் பொருட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2 நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு தேர்வர்கள் நடத்தப்படுகின்றன. முன்னதாக, 2022 ஆண்டுக்கான  தேர்வு கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, பிப்ரவரி 3,4,5,6,7,8 ஆகிய தேதிகளில்  முதற் கட்டமாக நடைபெறும் என்றும்,  10,11,12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்ட District Admit card-ல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட மாவட்டத்தைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், இரண்டாம் கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலர் இந்த மாவட்ட தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்ப சிக்கலை சந்தித்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

மேலும், தேர்விடம் தொடர்பான அனுமதிச் சீட்டு (Venue Admit card ) திட்டமிட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உதாரணமாக, வரும் 3ம் தேதி தேர்வெழுத இருக்கும் தேர்வர்கள், இம்மாதம் 31ம் தேதி முதல் தேர்விட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்ட தேர்விடத்தைத் தவிர்த்து வேறெங்கும் தேர்வெழுத தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க:  தமிழ்நாட்டில் 3,167 கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

First published:

Tags: TNTET