முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / IAS Exam Preparation: நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் அதிகாரி! - அடிப்படை தகுதி முதல் தேர்வுமுறை வரை- முழு விபரம் இதோ!

IAS Exam Preparation: நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் அதிகாரி! - அடிப்படை தகுதி முதல் தேர்வுமுறை வரை- முழு விபரம் இதோ!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு). 

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023ம் ஆண்டு குடிமைப் பணி முதல்நிலைத்  தேர்வுக்கான (Civil Services (Preliminary) Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 21ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில் குடிமைப் பணி தேர்வு என்றால் என்ன... இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன... தேர்வு முறை என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே காண்போம்.

அரசுத் துறைகளின் மூலம் மக்களுக்கு நேரடியாக சேவைகள் புரியும் அனைத்து பணிகளும் குடிமைப் பணிகள்தான். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, 2, 1 தேர்வுகள் மூலம் பல்வேறு பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பி வருகிறது. அதேபோன்று, அகில இந்திய அளவில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பி வருகிறது.

இந்த குடிமைப் பணிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அனைத்திந்திய குடிமைப் பணிகள் (All Indian service), மற்றொன்று மத்தியப் பணிகள் (Central Service). அனைத்திந்திய பணிகளின் கீழ், ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) ஆகிய மூன்று பணிகள் உள்ளன. அதேபோன்று, மத்தியப் பணிகளின் கீழ், ஐஆர்எஸ், இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வருகின்றன. ஐஏஎஸ் போன்ற அனைத்திந்திய அலுவலர்கள், மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் பணி செய்வதற்காக பணி அமர்த்தப்படுகின்றனர். பொதுவாக, ஐஏஎஸ் அதிகாரிகள் மாநில அரசுகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், Deputation மூலம் மத்திய அரசு பணிகளுக்கு அழைக்கப்படலாம். அதே சமயம், மத்தியப் பணிகளின் கீழ் பணியமர்த்தப்படுவர்கள் இந்திய அரசின் கீழ் மட்டுமே  பணி செய்கின்றனர். இவர்கள் எந்தவொரு மாநில அரசுகளையும் சேராதவர்கள்.  

அனைத்திந்திய பணிகள்Indian Administrative ServiceIndian Forest ServiceIndian Police Service
மத்திய பணிகள்1. Indian Foreign Service,2.Indian Audit and Accounts Service, Group ‘A’,3. Indian Civil Accounts Service, Group ‘A’,4. Indian Corporate Law Service, Group ‘A’,5. Indian Defence Accounts Service, Group ‘A’,6. Indian Defence Estates Service, Group ‘A’,7. Indian Information Service, Group ‘A’,8. Indian Postal Service, Group ‘A’,9. Indian P&T Accounts and Finance Service, Group ‘A’10. Indian Railway Protection Force Service, Group ‘A’11. Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’12. Indian Revenue Service (Income Tax) Group ‘A’13. Indian Trade Service, Group ‘A’ (Grade III)14. Indian Railway Management Service, Group ‘A’15. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)16. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’17. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar HaveliPolice Service (DANIPS), Group ‘B’18. Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’19. Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் சேர்த்தே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணி தேர்வுகளை நடத்தி வருகிறது. தரவரிசைப் பட்டியலில் முதல் இடங்களில் வரும் தேர்வர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணியை தேர்வு செய்து வருகின்றனர். அதன், காரணமாக இந்த தேர்வு ஐஏஎஸ் தேர்வு என்று கூறப்படுகிறது.

இந்த தேர்வுக்கு கல்வித் தகுதி என்ன?  ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. இந்த பட்டத்தினை உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது தொலைதூர கல்வி மூலமாகவோ பெற்றிருக்கலாம்.

வயது வரம்பு:  21 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை? 

இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு).

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

முதல் நிலைத் தேர்வு: 

முதல்நிலைத்  தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் ஒன்று - பொதுஅறிவு, தாள்- ii ஆங்கிலம் மற்றும் கணித அறிவு.  கேள்விகள் Multiple Choice Questions தன்மையில் இருக்கும். இரண்டாம் தாள் தகுதித் தேர்வாகும். மொத்த மதிப்பெண்ணில் 33% பெற்றால் போதுமானது.

தேர்வுகள்பாடம்கேட்கப்படும் கேள்விகள்ஒரு கேள்விக்கான மதிப்பெண்மொத்த மதிப்பெண்
முதல் நிலைத் தேர்வுபொதுப் பாடம் (தாள்-I)1002200
குடிமை பணி உளச்சார்பு தேர்வு (தாள்-II)802.5200
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண்400

முதன்மைத் தேர்வு: 

முதல் தாளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வு 9 தாள்களைக் கொண்டது. விரிவான  வகையில் விடையளிக்க வேண்டும்.

பாடம்மதிப்பெண்
1.தாய்மொழி300 (தேர்ச்சி பெற்றால் போதுமானது)
2.ஆங்கிலம்300 (தேர்ச்சி பெற்றால் போதுமானது)
3கட்டுரை250
4தாள் - I (இந்திய வரலாறு, உலக வரலாறு,  இந்திய பண்பாடு )250
5தாள் - II (ஆட்சி நிர்வாகம், இந்திய அரசியலமைப்பு )250
6தாள் - III (இந்திய பொருளாதாரம், சுற்றுச்சூழல் )250
7.தாள் - IV (ஒழுக்கம், தார்மீக பொறுப்பு)250
8.விருப்பப்பாடம் ( தாள் - I )250
9விருப்பப்பாடம் ( தாள் - II )250
மொத்தம்1750

நேர்காணல் :

முதன்மைத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் தேர்வு மதிப்பெண்  275 ஆகும்.

தொடர்ச்சியாக தேர்ச்சி பெற வேண்டும்: தரவரிசைப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென்றால், மூன்று தேர்வு நிலைகளிலும் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற வேண்டும். உதாரணமாக, நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்தாண்டு இந்த மூன்று தேர்வுகளையும் மறுபடியும் முதலில் இருந்தே எழுத வேண்டும்.  இதுவே, இந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் பலருக்கும் சவாலாக இருக்கிறது.

First published:

Tags: Central Government Jobs