முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? - ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? - ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Village Assistant Post online application: நீங்கள் அளிக்கும் அனைத்து விவரங்களும் மிகச்சரியானதாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை  அருகில் வைத்துக் கொண்டு விவரங்களை உள்ளிடுவது நல்லது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

2748 Village Assistant Jobs Online Application: மாநிலத்தின் அனைத்து மாவட்ட வட்ட எல்லைக்குள் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் கிராம உதவியாளர்  பதவிக்கான விண்ணப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஸ்டெப் 1: வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் agaram.tn.gov.in இணையதளத்துக்கு செல்லவும்.

ஸ்டெப் 2: ஆன்லைன் விண்ணப்பத்தில் உங்களது பெயர் (ஆங்கிலத்திலும், தமிழிலும் ), தந்தை /கணவரின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, பாலினம், தேசியம், மதம், சமூகம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்கவும்.

நீங்கள் அளிக்கும் அனைத்து விவரங்களும் மிகச்சரியானதாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை  அருகில் வைத்துக் கொண்டு விவரங்களை உள்ளிடுவது நல்லது.

ஸ்டெப் 3: விண்ணப்பதாரர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். எனவே, இந்த ஸ்டெப்பில் நீங்கள் இருக்கும் மாவட்டம், தாலுக்கா, கிராம இருப்பிடம் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால், தருமபுரி,பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகியவற்றில் இருந்து நீங்கள் இருப்பிடமாகக் கொண்ட தாலுகாவை தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, அந்த தாலுகாவில் நீங்கள் இருப்பிடமாகக் கொண்ட கிராமத்தை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இருப்பிடமாகக் கொண்ட கிராமத்தில் கிராம உதவியாளர் காலியிடம் இல்லையென்றாலும், உங்கள் தாலுகாவில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் வாசிக்க: 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஸ்டெப் 3: உங்கள் கைவசம் உள்ள/ உங்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் தொலைபேசி எண்/மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பிக்கவும்.

ஸ்டெப் 4: கிராம உதவியாளர் பதவிக்கு தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். எனவே, உங்கள் கல்வித் தகுதி,  இதர தொழில்நுட்ப தகுதி, ஓட்டுநர் திறன் விவரங்களை  குறிப்பிடவும்.

இதையும் வாசிக்கவிருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!

ஸ்டெப் 5:  உங்களது புகைப்படம்,கையொப்பம், கல்வித் தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமச் சான்றிதழ், சாதிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் pdf-ல் 256 kb-க்குள் இருக்க வேண்டும்.

அருகில் உள்ள PRINTOUT கடைக்குச் சென்று, உங்களது சான்றிதழைகள் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். ஸ்கேன் செய்த ஆவணங்களை PDF Format-ல் 256 kb-க்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்ப சொல்லுங்கள். பின்னர், ஆன்லைன் விண்ணபப்த்தில் உரிய இடத்தில் பதிவேற்றம் செய்து விடுங்கள்.

இறுதியாக, நான் அளித்த அனைத்து தகவல்களும் உண்மை என்று உறுதியளிக்கிறேன் என்பதை டிக் செய்துவிட்டு, சப்மிட் செய்து விடுங்கள்.

First published:

Tags: Job, Recruitment, Tamil Nadu Government Jobs, Village