India post Jobs 2023 : அரசு வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. இந்தியா போஸ்ட் சுமார் 40,889 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற இந்திய போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் ஆட்சேர்ப்பு செய்யப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 16, 2023 ஆகும்.
காலியிட எண்ணிக்கை : மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 40,889 ஆகும். அதில், தமிழகத்தில் காலியாக உள்ள பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் பதவிகளுக்கு சுமார் 3,167 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிவிஷன் வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பார்வையிடலாம்.
சம்பள விவரம் : பிபிஎம் பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். ABPM மற்றும் Dak Sevak பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 24,470 வரை மாத சம்பளம் வழங்கப்படும். மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு இங்கே கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு : இந்த காலியிடங்களை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பத்தாவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு குறித்து பேசுகையில், விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச அவரது வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்து பேசுகையில், OBC-க்கு 3 ஆண்டுகளும், SC/ST-க்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 - 15 வருடம் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து ஷார்ட் லிஸ்ட் செய்யப்படுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட வாரிய விதிமுறைகளின்படி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பை பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, India post, Job Vacancy, Jobs