திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் பணிக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.60,000 ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 08.03.2023 ஆம் நாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்கள் கீழ் வருமாறு.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
மருத்துவமனை தர மேலாளர் | 1 | 45 | ரூ.60,000 |
கல்வித்தகுதி:
Hospital Administration பிரிவில் முதுகலைப் பட்டம் / Health Management பிரிவில் முதுகலைப் பட்டம் / Public Health பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் deangmctpr@gamil.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருப்பூர் - 641 604.
இப்பணிக்கு 15.03.2023 அன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Tiruppur