முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / நிரப்பப்படாத அரசு பணியிடங்கள் அனைத்தும் நீக்கம்: தேர்வர்களுக்கு ஷாக்!

நிரப்பப்படாத அரசு பணியிடங்கள் அனைத்தும் நீக்கம்: தேர்வர்களுக்கு ஷாக்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

அரசின் இந்த திடீர் அறிவிப்பு, அரசுத் தேர்வுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2 ஆண்டுகளாக அரசின் பல்வேறு துறைகளில்  நிரப்பப்படாத பணியிடங்கள் அனைத்தும் அகற்றப்படுவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அனைத்து அரசு செயலாளர்கள், பொதுத்துறை மற்றும் வாரியத் தலைவர்களுக்கும், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) அனுப்பிய சுற்றறிக்கையில், " கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல்/காலியாக உள்ள அனைத்துப் பதவிகளும் நீக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும். முறையான ரத்து ஆணைகள் ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையால் வெளியிடப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகள் நிரப்பப்டாத பதவிகள் எக்காரணமும் கொண்டும் புதுப்பிக்கும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது” என்று உத்தரவிட்டுள்ளார்.

நியாமான கோரிக்கைகள் இருந்தால் மட்டும் அந்த பணியிடங்கள் புதிதாக உருவாக்கம் செய்ய அனுமதிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து  காலிப் பணியிடங்கள் பெறப்பட்டு, போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு இந்த சுற்றரிக்கை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

இதையும் வாசிக்க: போஸ்ட் ஆபீஸ் வேலை.. 3167 அஞ்சல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஹரியானா அரசின் இந்த திடீர் அறிவிப்பு, அரசுத் தேர்வுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று அம்மாநில  எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Recruitment