முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TANGEDCO நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களா? இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

TANGEDCO நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களா? இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், செய்தித் தாள்களிலும் வெளியிடப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) பெயரில் சமூக ஊடங்கங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக,   தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர் (Assessors) காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.ஆனால், இது போலியான வேலைவாய்ப்பு அறிவிக்கை என்று  டான்ஜெட்கொ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், செய்தித் தாள்களிலும் வெளியிடப்படும். போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்  என்று தெரிவித்துளளது.

முன்னதாக, இந்த மதிப்பீட்டாளர்கள் பணி தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " தற்போது இருக்கும் மின் கணக்கு எடுக்கும் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றிவிட்டால், இந்தப் பணிக்கு புதிய ஆட்கள் எடுக்கும் தேவையிருக்காது" என்று தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிக்க8-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: கும்பகோணம் அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை

எனவே, வேலை தேடும் இளைஞர்கள், போலி அறிவிப்புகளை நம்பாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள அந்தந்த அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஒருமுறை பார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs