முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரேஷன் கடை மூலம் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்: அரசின் சூப்பர் யோசனை என்ன தெரியுமா?

ரேஷன் கடை மூலம் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்: அரசின் சூப்பர் யோசனை என்ன தெரியுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் தற்போது மாதம் ரூ.50 ஆயிரம் ஈட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

சிஎஸ்சியின் சேவைகளை ரேஷன் கடைகளில் அனுமதிப்பதன் மூலம் கடை விற்பனையாளர்களின் (Ration Shops Dealers) வருமானத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்த முடியும் என்று உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்தார். முன்னதாக, கடந்த 15ம் தேதி புதுடெல்லியில், நியாயவிலைக் கடைகளின் மாற்றத்திற்கான தேசிய மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டை, MicroSave Consulting (MSC) என்ற தனியார் நிதிசேவை நிறுவனத்துடன் இணைந்து மத்திய உணவுத் துறை நடத்தியது.

ரேஷன் கடைகள் விவரம்:  

நாட்டில், தற்போது 5,27,930 நியாய விலைக் கடைகள் உள்ள. இதில், 3 லட்சத்திற்கும் அதிகமான கடைகளை (565)  தனியார் நபர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், பொது விநியோக பொருட்களை மட்டுமே விற்பதன் மூலம் தங்களின் போதிய வருமானம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, ரேஷன் கடைகளில், மற்றப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் நடவடிக்கைய மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இம்மாநாட்டில் உரையாற்றிய சஞ்ஜீவ் சோப்ரா, பொது விநியோக பொருட்களைத் தாண்டி, எஃப்எம்சிஜி பொருட்களை (Fast Moving Consumer Goods- வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) விற்க அனுமதிப்பதின் மூலம் ரேஷன் கடைகள் நவீனமான மாறும் என்று தெரிவித்தார்.  இதற்கு, அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு  கடிதம் எழுதியுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ரேஷன் கடைகளில்  கூடுதல் பொது சேவைகளை (Common Service centre) வழங்குவதன் மூலம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மாதம் ரூ.50,000 வரை வருவாய் ஈட்டி வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக,ரேஷன் கடைகளில் ஆதார் எண் சேர்ப்பது, உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது போன்ற பொது சேவைகளை உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க  மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதுதொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு மத்திய விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, தற்போது, நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடைகளில் இந்த சேவை கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் உள்ள  விற்பனையாளர்கள் மற்ற சேவைகளை அளிப்பதன் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்டி வருகின்றனர்

இதையும் வாசிக்க:  ரூ.62000 வரை சம்பளம்... ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், 34,790 கடைகளில் கிட்டத்தட்ட 98. 8% கடைகள் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் கீழ் நடத்தப்படுகிறது. இதில் பணிபுரியும் விற்பனையாளர்களின் ஊதிய வரம்பு ரூ,8600 முதல் 29,000 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சொற்ப கடைகள் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படுகின்றன.

First published:

Tags: Ration Shop