ரூ. 60 ஆயிரம் சம்பளத்தில் பி.இ முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் விரைவில் முடியவுள்ள நிலையில், பணி குறித்த விபரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1965-ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு இஞ்சினியர்ஸ் இந்தியா வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 75 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் : Management Trainees
காலியிடங்கள் மொத்தம் : 75
மெக்கானிக்கல் - 35
எலக்ட்ரிகல் - 13
சிவில் - 12
Instrumentation - 9
கெமிக்கல் - 6
இதையும் படிங்க -
கால அவகாசம் நீட்டிப்பு.. TNPSC Group 2 தேர்வுக்கு தயாராவோர் அவசியம் படிக்க...
கல்வி தகுதி :
குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் + மற்ற சலுகைகள்
வயது தகுதி :
பொதுப்பிரிவினர் 25 வயது - ஓபிசி 28 வயது, எஸ்.சி.எஸ்.டி. 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க -
டிகிரி முடித்தவர்களுக்கு பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
www.engineersindia.com என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
14.03.2022
தேர்வு செய்யப்படும் முறை :
கல்வி தகுதி, GATE 2022 -ல் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான கூடுதல் விபரங்களைப் பெற
இங்கே க்ளிக் செய்யவும்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.