முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நடைப்பெற்று முடிந்த குரூப் 2 முதன்மைத் தேர்வை உடனடியாக ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடந்து முடிந்த குரூப் 2 முதன்மைத் தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில் மறுதேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டும் என அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் கணக்கில், " தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை (25ம் தேதி) நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை

5,446 காலிப்பணியிடங்களுக்கான குரூப் – 2 முதன்மைத் தேர்வு கடந்த 25ம் தேதி மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் நடைபெற்றது. தேர்வின்போது, வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, பிற்பகல் தேர்வு நேரம், அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.

First published:

Tags: Edappadi Palanisami, TNPSC