தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, மிஷன் வாட்சல்யா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர் ஒரு பணியிடத்திற்கு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக பணியாளருக்கு தொகுப்பூதியமாக 18.536/- ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். சமூக பணியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (10 + 2+3). சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், சமூக பணி மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்று அல்லது மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதையும் வாசிக்க: எழுத்துத் தேர்வும் எதுவும் இல்லை: தமிழ்நாடு சிபிஎஸ்இ பள்ளிகளில் 4,188 காலியிடங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத் தெரு (மாடி), எஸ்.பி,ஆர் நகர், மாவட்ட ஆச்சரியரகம் (அஞ்சல்), திண்டுக்கல் - 624 004, தொலைபேசி எண். 0451 - 2904070 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.