முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

அஞ்சல் துறை வேலை

அஞ்சல் துறை வேலை

விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம்  இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் உள்ள அலுவலங்கங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (Staff Car Driver -General Central Service, Group-C, Non- Gazetted, Non - Ministerial) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிட விவரம்:

சென்னை நகர மண்டலம் (Chennai City Region)6
மத்திய மண்டலம்9
அஞ்சல் ஊர்தி சேவை, சென்னை (MMS, Chennai)25
தெற்கு மண்டலம் (Southern Region)3
மேற்கு மண்டலம் (Western Region)15
மொத்தம்58

அடிப்படை தகுதிகள்: இந்த  ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம்  இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின்  வயதுவரம்பு  31.03.2023 அன்று 18 -27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல்  சாதிகள்/ பட்டியல்  பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

சம்பள நிலை: 19,900 முதல் 63,200 வரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிகள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs