முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 40,000 கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. மிஸ் பண்ணாதீங்க

40,000 கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. மிஸ் பண்ணாதீங்க

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

Department of Post gramin Dak sevaks: கிளை அஞ்சல் நிலையங்களில் பணியமர்த்தப்படும் கிராம அஞ்சல் பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3, 167 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

பணி விவரங்கள்: 

பணியின் பெயர்கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) NOTIFICATION: 17-21/2023-GDS
காலியிடங்கள்3,167 (தமிழ்நாட்டில் மட்டும்) . நாடு முழுவதும் 40,889 காலியிடங்கள்
ஊதியம் மற்றும் படிகள்கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) - ரூ. 12,000 முதல் 29,380 வரை. உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை
கல்வித் தகுதி குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்

நாட்டில் மொத்தம் 1,59,225 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில், 1,30,000க்கும் மேற்ப்பட்ட நிலையங்கள், கிராமப்புற பகுதிகளில் கிளை அஞ்சல் அலுவலகங்களாக செயல்பட்டு வருகிறது. இத்தைகய நிலையங்கள், முழு நேர ஊழியர்கள் அல்லாமல் கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள் துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள் (Branch, Sub and Head Post offices). கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாக பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

Indian Post Gramin Dak Sevas (GDS) விண்ணப்பம் செய்வது எப்படி? 

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி தேதி 16.02.2023 ஆகும்.

First published:

Tags: Central Government Jobs