ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு..!

அரசு மருத்துவமனையில் வேலை

அரசு மருத்துவமனையில் வேலை

TN job alert : புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் சுகாதாரப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுக்கோட்டைத் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடும்பாளூர் வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர் பணியிடத்திற்கும் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், புதுக்கோட்டை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒரு பல் மருத்துவர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: பல் மருத்துவர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.D.S பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுஊதியம்
பல் மருத்துவர்235ரூ.34,000
பல் மருத்துவ உதவியாளர்135ரூ.13,800

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் https://pudukkottai.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்.

முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

பழைய பேருந்து நிலைய அருகில்,

நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,

மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622 001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.01.2023. மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Also Read : மத்திய துணை காவல் படையில் 1458 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

First published:

Tags: Employment news, Jobs, Tamil Nadu Government Jobs