ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம்

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம்

TN job alert : தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் (Tamil Nadu Biodiversity Board) தற்காலிக அடிப்படையில் DATA ENTRY OPERATOR பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணி 4 மாதங்களுக்கு மட்டுமே. பின்னர் திறமையில் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்பணிக்கு 3 இடங்கள் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். MS Excel, Lower grade தட்டச்சு மற்றும் taxonomy பற்றி அறிவு தேவை.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்Data Entry Operator - Technical
பணியிடம்3
வயது30
சம்பளம்ரூ.18,000

கல்வித்தகுதி:

Data entry Operator பணிக்கு Botany/Zoology அல்லது அதற்கு நிகரான இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்து எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்கு அழைப்பர்.

Also Read : ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை : டிப்ளமோ/டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnbb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://tnbb.tn.gov.in/

முகவரி:

The Secretary,

Tamil Nadu Biodiversity Board,

TBGP Campus II Floor,

Nanmangalam, Medavakkam Post,

Chennai - 600100.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs