ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் வரை சம்பளத்தில் மத்திய அரசின் பெட்ரோலியம் கழகத்தில் வேலை

12 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் வரை சம்பளத்தில் மத்திய அரசின் பெட்ரோலியம் கழகத்தில் வேலை

இந்திய பெட்ரோலியம் கழகம்

இந்திய பெட்ரோலியம் கழகம்

CSIR-IIP Recruitment : டேராடூனில் அமைந்திருக்கும் இந்திய பெட்ரோலியம் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டேராடூனில் அமைந்திருக்கும் இந்திய பெட்ரோலியம் கழகம் CSIR உடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இங்கு காலியாக உள்ள Junior Secretariat Assistant/Junior Stenographer என்ற பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Junior Secretariat Assistant (General)328ரூ.19,900-63,200
Junior Secretariat Assistant (Store & Purchase)228ரூ.19,900-63,200
Junior Secretariat Assistant (Finance & Accounts)228ரூ.19,900-63,200
Junior Stenographer427ரூ.25,500-81,100

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Junior Secretariat Assistant12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
Junior Stenographer12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Stenography

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.65 ஆயிரம் வரை சம்பளம்..தமிழ் தெரிந்தால் போதும் - தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் பணி...!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.iip.res.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.iip.res.in/recruitment-2/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Government jobs