ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய துணை காவல் படையில் 1458 காலியிடங்கள்: இளைஞர்களே உடனே விண்ணப்பியுங்கள்

12ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய துணை காவல் படையில் 1458 காலியிடங்கள்: இளைஞர்களே உடனே விண்ணப்பியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

உதவி சார்பு ஆய்வாளர் பதவிக்கு மாதம் ரூ.29200 முதல் ரூ. 92300 வரையும் , தலைமைக் காவலர் (எழுத்துப்பணி) பதவிக்கு மாதம் ரூ.25500 முதல் 81100 வரை  கணக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)  உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக உள்ளது. இப்படை, மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

இந்நிலையில், இதில் காலியாக உள்ள 143 உதவி சார்பு ஆய்வாளர்  (CRPF - Assistant Sub Inspector - steno) 1,315 தலைமைக் காவலர் (எழுத்துப்பணி) பதவிக்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது.  இதற்கு,  விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 25/01/2023 ஆகும்.

மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிலை (10+2) அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்த இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆண்/பெண் என  இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதே சமயம்,  மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க  வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பம் பெறும் கடைசி தேதி அதாவது 25/01/2023 அன்று 18 முதல் 25 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 26/01/1998 தேதிக்கு முன்பு அல்லது 25/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள கணக்கீடு: உதவி சார்பு ஆய்வாளர் பதவிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ. 92,300 வரையும் , தலைமைக் காவலர் (எழுத்துப்பணி) பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை  கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெரிவு முறை: கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும்.

விண்ணப்பம் செய்வது எப்படி :  விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://crpf.gov.in/index.htm இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களும், ஆட்சேர்க்கை அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.  

First published:

Tags: Central Government Jobs