ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கோவையில் கிராம உதவியாளர் நேர்காணல் தொடக்கம்: முக்கிய விவரம் உள்ளே!

கோவையில் கிராம உதவியாளர் நேர்காணல் தொடக்கம்: முக்கிய விவரம் உள்ளே!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கோயம்பத்தூர் கிராம உதவியாளர் நேர்காணல்: கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஒட்டுநர் உரிமம் அசல் மற்றும் நகல் மற்றும் முகவரி ஆதாரம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் திறனறிதல் தேர்வு  நேற்று முதல் வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக, கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலகில், மேட்டுப்பாளையம், அன்னூர், கோயம்புத்தூர் வடக்கு, சூலூர், பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 04.12.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

இதன் அடிப்படையில், இதற்கான நேர்காணல் மற்றும் திறன் தேர்வு நேற்று (05.01.2023) முதல் 10.01.2023 (விடுமுறை நாட்கள் தவிர) வரை கீழ்க்கண்ட மையங்களில் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வட்டம்தேர்வு மையம்தேர்வர்களின் எண்ணிக்கை
மேட்டுப்பாளையம்வட்டாச்சியர் அலுவலகம், மேட்டுப்பாளையம்229
 அன்னூர்வட்டாச்சியர் அலுவலகம், அன்னூர்244
கோயம்புத்தூர் வடக்கு,வட்டாச்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் வடக்கு506
சூலூர்வட்டாச்சியர் அலுவலகம், சூலூர்467
பேரூர்வட்டாச்சியர் அலுவலகம், பேரூர்284
மதுக்கரைவட்டாச்சியர் அலுவலகம், மதுக்கரை51
கிணத்துக்கடவுவட்டாச்சியர் அலுவலகம், கிணத்துக்கடவு109
பொள்ளாச்சிவட்டாச்சியர் அலுவலகம், பொள்ளாச்சி496
ஆனைமலைவட்டாச்சியர் அலுவலகம், ஆனைமலை262

விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஒட்டுநர் உரிமம் அசல் மற்றும் நகல் மற்றும் முகவரி ஆதாரம் அசல் மற்றும் நகல் கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.தேர்வு மையம், தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் விண்ணப்பதாரர் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுளளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs