முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காட்சிப் படம்

காட்சிப் படம்

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer – Rs.27,804/-) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator – Rs.13,240/-) பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior level) முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இதையும் வாசிக்க:   பழனி கோவில் வேலைவாய்ப்பு: ரூ. 60,000 வரை சம்பளம்- ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் – 641 018 ஆகும்.

மாவட்ட பாதுகாப்பு அலகு (சங்கம் ): 

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு/சங்கம்  செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களோடு இணைந்து நல்ல முறையில் செயல்படுத்துதல் இந்த அலகின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் தலைமையில் 11 பணியாளர்களுடன் இந்த சங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs