ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.69,000 வரை சம்பளம் : மத்திய தொழில் காவல் படையில் 450 ஓட்டுநர் பணியிடங்கள்!

ரூ.69,000 வரை சம்பளம் : மத்திய தொழில் காவல் படையில் 450 ஓட்டுநர் பணியிடங்கள்!

மத்திய தொழில் பாதுகாப்பு  படை

மத்திய தொழில் பாதுகாப்பு படை

CISF Recruitment 2023: 451 காவல் ஓட்டுநர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய தொழில் பாதுகாப்பு படையில்  காலியாக உள்ள 451  காவல் ஓட்டுநர் ( Constables/Driver & Constables/Driver-Cum-Pump-Operator  நிலை பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பது வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்காவல் ஓட்டுநர்
காலியிடங்கள்451
கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் ((equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் .
வயது வரம்பு21க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.
தேர்வு முறைதேர்வு முறை இரண்டு நிலைகளை உள்ளடக்கியது.முதல் நிலையில் உடற்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, தொழிற் திறன் தேர்வு மேற்கொள்ளப்படும்.( Physical Standard Test/Physical Efficiency Test, Documentation & Trade Test)இரண்டாம் நிலையில், கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்
பணியின் தன்மைதற்காலிகமானது. ஆனால், நிரந்தரம் செய்ய வாய்ப்புண்டு
சம்பளம் ரூ21,700- ரூ, 69,100 வரை  (  ஊதிய நிலை -3 )
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்22/02/2023 அன்றிரவு 11 மணி வரை

 விண்ணப்பக் கட்டணம்:ரூ .100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் கூறப்படுகிறது

First published:

Tags: Central Government Jobs