சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஜனவரி 23ம் தேதி) அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்களுக்கான ( Direct Agents for sale of Postal Life Insurance / Rural Postal Life Insurance products) நேர்காணல் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
யார் கலந்து கொள்ளலாம்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை /கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதேபோன்று, இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை
மேற்கண்ட தகுதியுடையவர்கள், நாளை மறுநாள் ( ஜனவரி 23ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடம்: எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம்.
தேவைப்படும் ஆவணங்கள்: மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்று
நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs