மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அறிவியல் அமைப்பான சி-டாக் (Centre for Development of Advanced Computing) பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான நாட்கள்:
இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: பிப்ரவரி 20, மாலை 6 மணி வரை
நேர்காணல் தேர்வு: பின்னர் அறிவிக்கப்படும்.
காலியிடங்கள்:
பணி | காலியிடங்கள் எண்ணிக்கை |
---|---|
Project Associate | 30 |
Project Engineer/Marketing Executive | 300 |
Project Manager / Programme Manager / Program Delivery Manager / Knowledge Partner/Prod. Service & Outreach (PS&O) Manager | 40 |
Senior Project Engineer / Module Lead / Project Lead/Prod. Service & Outreach (PS&O) Officer | 200 |
ஏஐசிடிஇ மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி அறிவியல், தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், பெருங்கடல் அறிவியல் (Ocean Science), அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் ஆற்றல் கொண்ட மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி, தேர்வு முறை, சம்பளம், முன்அனுபவம் ஆகியவை குறித்து சி-டாக் இணைய தளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தளத்தில் உள்ள விவரங்களை முழுமையாக படித்து பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், விவரங்கள் பெற recruitment@cdac.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs