இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானது. மேலும் தமிழ் படித்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்குச் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ. 29,380 வரை வழங்கப்படவுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்குத் தேர்வு இல்லாமல் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன? பணிக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரை விளக்கும்.
விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்:
முதலில் ஆன்லைனில் விண்ணப்பப்படிவத்தை நிரப்புவதற்கு முன்பு சில விவரங்களை நாம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி மூலம்தான் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்களின் ஆதார் எண் தேவைப்படும். எனவே ஆதார் அட்டையை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதனைத்தொடர்ந்து, இப்பணிகள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பவுள்ளதால், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வைத்துக்கொள்ளவும். அதில் நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வருடம் மற்றும் எந்த வழிக் கல்வி (மாநில வழிக் கல்வி) போன்ற தகவல்கள் விண்ணப்பப்படிவத்தை நிரப்பத் தேவைப்படும். மதிப்பெண்கள் உள்ளிடும் இடத்தில் சான்றிதழில் உள்ளது போலவே சரியாக உள்ளிடவேண்டும்.
ஆன்லைனின் விண்ணப்பிக்க 16.02.2023 ஆம் நாள் கடைசி. எனவே அது வரை ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் உள்ளிட்ட தகவல்களின் படி தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் உங்களின் பெயர் இடம்பெற்று இருந்தால் உங்களுக்குப் பாதி அளவு வேலை உறுதி.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
தற்காலிக பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருந்தால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அப்போது கீழே குறிப்பிடப்படும் ஆவணங்களின் உண்மையான சான்றிதழ் மற்றும் 2 நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆவணங்களின் பட்டியல்
1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ்
2. சாதி சான்றிதழ்
3. மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ்
4. திருநங்கை என்றால் அதற்கான சான்றிதழ்
5. பிறப்பு சான்றிதழ்
6. மருத்துவ சான்றிதழ்
மருத்துவ சான்றிதழ் பெறுவது எப்படி?
உங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் போன்ற மருத்துவமனைகளில் உள்ள அரசு மருத்துவர்களிடம் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, India post, Post Office, Post Office Jobs