தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலகில் உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்குப் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் வாழ்வாதார திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு அகஸ்தீஸ்வரம் - 1 , குருந்தன்கோடு - 1, முஞ்சிறை - 1 ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட வட்டாரத்திற்குள் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
வட்டார ஒருங்கிணைப்பாளர் | அகஸ்தீஸ்வரம் - 1,குருந்தன்கோடு - 1,முஞ்சிறை - 1 | 28 | ரூ.12,000 |
கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு மற்றும் MS-Office 3 மாத காலம் பயின்ற சான்றிதழ் அல்லது கணினி அறிவியல் பாடத்தில் டிகிரி. மேலும் 2 ஆண்டுகள் அனுபவம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக த் தேர்வு மூலம் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள பெண்கள் https://kanniyakumari.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விவரங்கள் படி விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் முகவரி:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம்,
கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில் - 629 001.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10.02.2023 மாலை 5.45 மணி.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.