BOB PO Recruitment 2023 : பேங்க் ஆஃப் இந்தியா (BOI) ப்ரோபேஷனரி ஆபீசர் ( Probationary Officers ) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் BOI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 25, 2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரம் : இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் மொத்தம் 500 ப்ரோபேஷனரி ஆபீசர் காலிப்பணியிடம் நிரப்படும். அதில், 350 பதவிகள் பொது வங்கி பிரிவில் கிரெடிட் அதிகாரி பதவிக்கும், 150 காலியிடங்கள் ஸ்பெஷலிஸ்ட் ஸ்ட்ரீமில் ஐடி அதிகாரி பதவிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி வரம்பு : காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.
வயது வரம்பு : BOI காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 20 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 175 செலுத்தினால் போதுமானது.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பை பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Jobs, Banking jobs, Job Vacancy