முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இராணுவ ஆயுதப் படை மையத்தில் 1793 காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

இராணுவ ஆயுதப் படை மையத்தில் 1793 காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 317 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்த்தில் உள்ள இராணுவ ஆயுதப் படை மையத்தில் ( Army Ordnance Corps - ஏஓசி மையம்) காலியாக உள்ள 1793 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tradesmen Mate, Firemen ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்Tradesmen Mate (ட்ரடேஸ்மென் மேட்): 1249 ; Firemen (பயர்மேன்): 544

அறிவிக்கை எண்:  Advertisement No AOC/CRC/2023/JAN/AOC-02

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 317 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை  aocrecruitment  இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்ப செயல்முறை ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,  தொழிநுட்ப கோளாறு காரணமாக விண்ணப்ப செயல்முறையை இராணுவ ஆயுதப் படை ஒத்திவைத்துள்ளது. 

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) விண்ணப்ப செயல்முறையின் போது தெளிவாக்க் கொடுக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Central Government Jobs