முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / Nokkam App: அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு குட் நியூஸ் -இலவச பயிற்சி பெற அசத்தல் வாய்ப்பு

Nokkam App: அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு குட் நியூஸ் -இலவச பயிற்சி பெற அசத்தல் வாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'நோக்கம்' என்ற செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு போட்டித் தேர்வுகளுக்கென்றே தயாராகி வரும் தமிழ்நாடு மாணவர்கள் பயன்பெறும் வகையில், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, ' நோக்கம்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி (Anna Administrative Staff College ) அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் YouTube channel ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அதன், தொடர்ச்சியாக, தற்போது போட்டித்  தேர்வுகளுக்கென்றே 'நோக்கம்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இச்செயலியின் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சிக் காணொலிகளைக் காண்பதோடு அதற்கான பாடக் குறிப்புகளையும் (notes) இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சமே மாதிரித் தேர்வுகள் தாம். ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தயாரிப்பின் நிலையை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும். 'நோக்கம்' செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs