ராணுவத்தில் அக்னிவீரர் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான நடைமுறையை இந்திய ராணுவம் மாற்றியமைத்துள்ளது. புதிய நடைமுறையின்படி, உடற்தகுதியை விட விண்ணப்பதாரரின் புத்தி கூர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அக்னிவீரர் பணிகளுக்கும் இந்திய ராணுவம் அந்தந்த மண்டலங்களில் ஆள்சேர்க்கை முகாம் மூலம் ஆள்சேர்க்கை நடத்தி வந்தது. ராணுவ முகாமில் ஓட்டப்பந்தயம், நீலம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் தேர்ச்சிபெறும் தேர்வர்கள், எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அக்னிவீரர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக, பொது நுழைவுத் தேர்வில் (Common Entrance Exam) கலந்து கொள்வார்கள் என்றும், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியானது, தேர்வர்களின் புத்தி கூர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், கூட்ட நெரிசல் இல்லாமல் ராணுவ முகாமினை நடத்த முடியும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம், நாடு முழுவதும் சுமார் 200 இடங்களில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இம்மாத மத்தியில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும், அக்னிபத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின்கீழ், 4 ஆண்டு காலத்திற்கு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.