ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருநெல்வேலி மாவட்டத்தில் 37 செவிலியர் காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் முறை என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் 37 செவிலியர் காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் முறை என்ன?

செவிலியர் பணி

செவிலியர் பணி

Staff Nurse Notification : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செவிலியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையம் போன்றவற்றில் உள்ள செவிலியர் காலிப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 50 வயதிற்குள் இருக்க வேண்டும். ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை 37 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பணியின் பெயர்:

பதவியின் பெயர்பணியிடம்
செவிலியர்37

கல்வித்தகுதி:

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing) தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் உள்ளவர்கள் https://theni.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்திசெய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-177

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 03.05.2023 மாலை 5 மணி வரை

அறிவிப்பைக் காண :  திருநெல்வேலி மாவட்ட அறிவிப்பு

First published:

Tags: Nurse job, Nurses Recruitment, Tamil Nadu Government Jobs