தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 208 செவிலியர், 2 இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் 1 தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
செவிலியர் | 208 |
இடைநிலை சுகாதார பணியாளர் | 1 |
தரவு உள்ளீட்டாளர் | 1 |
கல்வித்தகுதி:
செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)
தரவு உள்ளீட்டாளர் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி தேவை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் உள்ளவர்கள் https://namakkal.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம்,
நாமக்கல், நாமக்கல் மாவட்டம் - 637 003.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.01.2023 மாலை 5 மணி வரை.
அறிவிப்பைக் காண : நாமக்கல் மாவட்ட செவிலியர் அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.