தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 2,487 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
மாவட்டத்தின் பெயர் | பணியிடம் | கடைசி நாள் |
தென்காசி | 10 | 27.01.2023 |
இராமநாதபுரம் | 57 | 28.01.2023 |
சிவகங்கை | 41 | 27.01.2023 |
தூத்துக்குடி | 42 | 31.01.2023 |
விருதுநகர் | 13 | 25.01.2023 |
நாமக்கல் | 210 | 25.01.2023 |
மதுரை | 88 | 27.01.2023 |
கிருஷ்ணகிரி | 172 | 31.01.2023 |
திருப்பூர் | 126 | 30.01.2023 |
கன்னியாகுமரி | 40 | 27.01.2023 |
புதுக்கோட்டை | 114 | 27.01.2023 |
தஞ்சாவூர் | 140 | 30.01.2023 |
திருச்சி | 119 | 31.01.2023 |
கோயம்புத்தூர் | 119 | 30.01.2023 |
பெரம்பலூர் | 61 | 27.01.2023 |
செங்கல்பட்டு | 35 | 27.01.2023 |
திருப்பத்தூர் | 31 | 25.01.2023 |
மாயிலாடுதுறை | 101 | 27.01.2023 |
திருவள்ளுர் | 78 | 31.01.2023 |
கள்ளக்குறிச்சி | 54 | 25.01.2023 |
நாகப்பட்டினம் | 69 | 28.01.2023 |
வேலூர் | 23 | 28.01.2023 |
கடலூர் | 95 | 27.01.2023 |
ஈரோடு | 150 | 27.01.2023 |
சேலம் | 218 | 30.01.2023 |
தேனி | 27 | 03.02.2023 |
நீலகிரி | 63 | 27.01.2023 |
விழுப்புரம் | 68 | 31.01.2023 |
திருநெல்வேலி | 37 | 03.02.2023 |
தர்மபுரி | 86 | 27.01.2023 |
மொத்தம் | 2,401 |
கல்வித்தகுதி:
செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்குச் செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டும் https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-177 என்ற இணைய முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt hospitals, Nurse job, Nurses Recruitment, Tamil Nadu Government Jobs