ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

செவிலியர் பணி

செவிலியர் பணி

Krishnagiri Nurse Recruitment : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Krishnagiri, India

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
செவிலியர்172

கல்வித்தகுதி:

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council).

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் உள்ளவர்கள் https://krishnagiri.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,

கிருஷ்ணகிரி மாவட்டம்.

Also Read : 22 மாவட்டங்களில் 1743 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:  31.01.2023 மாலை 5 மணி வரை.

அறிவிப்பைக் காண : கிருஷ்ணகிரி மாவட்ட செவிலியர் பணி அறிவிப்பு

First published:

Tags: Krishnagiri, Nurse job, Tamil Nadu Government Jobs