மதுரையில் உருவாக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 முக்கிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மருத்துவ கண்காணிப்பாளர், நிதி ஆலோசகர், செயற்பொறியாளர், நிர்வாக அதிகாரி ஆகிய 4 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் புதுச்சேரியில் தற்போது பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்தப் பணிகளில் சேர்வதற்கு விருப்பம் உடையவர்கள் தற்போது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். கடந்த 19-ம்தேதி விண்ணப்பங்கள் பெறுவது தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஏப்ரல் 4, 2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு-
நிறுவனத்தின் பெயர் |
எய்ம்ஸ் மதுரை |
பணியிடங்கள் எண்ணிக்கை |
04 |
பணியின் பெயர் |
Medical Superintendant (மருத்துவ கண்காணிப்பாளர்), Financial Advisor (நிதி ஆலோசகர்), Executive Engineer (செயற்பொறியாளர்), Administrative Officer (நிர்வாக அலுவலர்) |
பணிபுரியும் இடம் |
புதுச்சேரி |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
விண்ணப்பம் தொடக்கம் |
19.02.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
04.04.2022 |
இணைய தளம் |
https://jipmer.edu.in/ |
பணியின் பெயர்
|
தகுதிகள்
|
மருத்துவ கண்காணிப்பாளர் |
MS அல்லது MD பட்டம் |
நிதி ஆலோசகர் |
மத்திய அரசு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம். |
செயற் பொறியாளர் |
8 ஆண்டுகள் செயற் பொறியாளர் அல்லது உதவி பொறியாளர் அனுபவம் |
நிர்வாக அலுவலர் |
MBA அல்லது PGDPM |
இதையும் படிங்க -
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு நேரத்தில் மாற்றம், வயது வரம்பு தளர்வு, முக்கிய அறிவிப்புகள் வெளியீடு....
வயது வரம்பு
மேற்கண்ட 4 பொறுப்புகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 56 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஊதிய விபரம்
தேர்வு செய்யப்படும் மருத்துவ கண்காணிப்பாளருக்கு மாதம் ரூ. 1,44,200 – ரூ. 2,18,200-ம், நிதி ஆலோசகருக்கு ரூ. 1,23,100 – ரூ. 2,15,900-ம், செயற்பொறியாளருக்கு ரூ. 67,700 – ரூ. 2,08,700-ம், நிர்வாக அலுவலருக்கு மாதம் ரூ. 56,100 – ரூ. 1,77,500-ம் வழங்கப்படும்.
இதையும் படிங்க -
மத்திய அரசுத் துறையில் 5,000 பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க பாஸ்
தேர்வு முறைகள்
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகிய 3 கட்டங்களாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Dr.Kusa Kumar Saha, Nodal Officer (AIIMS Madurai), Admin-I (Recruitment Cell), JIPMER, Puducherry – 605006.
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.