ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

ஈரோட்டில் வேலை

ஈரோட்டில் வேலை

Government Industrial Training Institute Recruitment : அரசின் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
அலுவலக உதவியாளர்2ரூ.15,700-58,100/-

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 34 ஆகவும் மற்றும் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 48 ஆகவும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் புகைப்படங்கள், சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://skilltraining.tn.gov.in/

Also Read : SBI வங்கியில் ஆண்டுக்கு 27 லட்சம் சம்பளத்தில் வேலை : டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

காசிபாளையம், ஈரோடு - 638009.

தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5.45.

First published:

Tags: Government jobs, Jobs