மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்ற பெண்

மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்ற பெண்
  • News18 Tamil
  • Last Updated: December 15, 2019, 12:22 PM IST
  • Share this:
மேட்டூர் மின் வாரிய பணிமனையில் நடைபெற்ற கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்ட 146 பெண்களில் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரிலுள்ள மின் வாரிய பணிமனையில் கடந்த 2-ம் தேதி முதல் நேற்று வரை கேங்மேன் பணிக்கான உடற் தகுதி தேர்வு கண்காணிப்பு பொறியாளர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது.

இதுவரை கலந்து கொண்ட 2,492 பேருக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப் பட்டது. இதில் 146 பெண்கள் உட்பட 1,510 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் மொத்தம் 435 ஆண்களும், ஒரே ஒரு பெண்ணும் என 436 பேர் தேர்வாகியுள்ளனர் .


தேர்வாகிய பெண் ஓமலூர் , பண்ணப் பட்டியைச் சேர்ந்த நெசவு தொழிலாளி மகள் சௌமியா ( 20 ) . கம்பம் ஏறுதல் தேர்வில் 8 நிமிடத்திற்கு 7.13 நிமிடத்தில் முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து சௌமியா தெரிவிக்கையில், " ஐ. டி.ஐ., ல் எலக்ட்ரீஷீயன் பிரிவில் தேர்ச்சி பெற்று , மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவேன்" என்றார்.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading