கஜா புயல் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

கஜா புயல் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 29, 2018, 9:25 PM IST
  • Share this:
கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக, சில குறிப்பிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.யின் செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுபாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, அப்பதவிகளுக்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2018 வரையும், அதற்கான தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் 12.12.2018 வரையும் நீட்டிக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.


 Loading...
அறிவிக்கை எண் பதவி / தேர்வு அறிவிக்கை தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி தேர்வு நாள்
28/2018

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்

 

JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN CO-OPERATIVE DEPARTMENT
23.10.2018 28.11.2018 27.01.2019
29/2018

உதவி இயக்குநர், தோட்டக்கலைத்துறை மற்றும் தோட்டக்கலை அலுவலர்.

ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER IN TAMILNADU HORTICULTURAL SERVICE
25.10.2018 21.11.2018

12.01.2019

&

13.01.2019
30/2018

வரைவாளர் நிலை-III

DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT
30.10.2018 28.11.2018 03.02.2019
31/2018

செயல் அலுவலர் நிலை –III

EXECUTIVE OFFICER GRADE-III IN HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT
02.11.2018 03.12.2018 16.02.2019
32/2018

செயல் அலுவலர் நிலை – IV

EXECUTIVE OFFICER GRADE-IV IN HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT
02.11.2018 03.12.2018 17.02.2019

 

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், மேற்படி பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் நாட்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also watch

First published: November 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...