கெயில் நிறுவனத்தில் 160 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கெயில் நிறுவனத்தில் டிப்ளமா என்ஜினியரிங், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை வேதியியல் படிப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

கெயில் நிறுவனத்தில் 160 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
கெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
  • News18
  • Last Updated: November 27, 2018, 8:13 PM IST
  • Share this:
இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்தில் (சுருக்கமாக கெயில் (GAIL)) ஜூனியர் என்ஜினியர், ஃபோர்மேன், ஜூனியர் கெமிஸ்ட், ஜூனியர் சூப்பிரண்டண்ட், டெக்னீசியன் உள்பட சுமார் 160 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பிரிவுகள்: 160 பணியிடங்களில் ஃபோர்மேன் பணிக்கு 55 பேரும், டெக்னீசியன் பணிக்கு 51 பேரும், மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு 21 பேரும், அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 10 பேரும்,  ஜூனியர் சூப்பிரண்டண்ட் பணிக்கு 7 பேரும், ஜூனியர் கெமிஸ்ட் பணிக்கு 10 பேரும், ஜூனியர் என்ஜினியர் பணிக்கு 3 பேரும், அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடும். பொதுவாக, 30-11-2018 நிலவரப்படி 26 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி, வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி வேறுபடும். டிப்ளமா என்ஜினியரிங், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை வேதியியல் படிப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

கடைசி தேதி: தகுதி வாய்ந்தவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 30.  மேலும் விவரங்களுக்கு http://gailonline.com என்ற வலைதளத்தை பார்க்கவும்.

Also watch
First published: November 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்