தற்போதைய டிஜிட்டல் உலகில் வேலை தேடுவது என்பது மிக எளிதான விஷயமாக மாறிவிட்டது. டெலிகிராம் , வேலைவாய்ப்பு இணையதளங்கள் , ஷேர் சேட் (Share Chat , ) செய்தித் தளங்கள் என நமது கையில் உள்ள மொபைல் போனுக்கே வேலை வாய்ப்பு நோட்டிபிகேஷன் வந்து சேர்கின்றது. நமக்கான தகுதியை வைத்து எந்த வேலை நமக்கு விருப்பமானது என்பதை தேர்வு செய்து அதில் நுழைய வேண்டியதே நாம் செய்ய வேண்டிய அடுத்த கட்ட நோக்கமாக உள்ளது.
தனியார் வேலை , அரசு வேலை , சுய தொழில் என நமக்கு எதில் விருப்பம் உள்ளதோ அதற்கான தகுதியை வளர்த்தால் மட்டும் போதுமானது. வேலை தேடுவது தற்போது இந்த மொபைல் உலகில் எளிதானதாக மாறிவிட்டது.
அவ்வகையில் தற்போது இந்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய சில வேலைகள் மற்றும் அதற்கான கல்வித் தகுதிகளை இங்கு வரிசை படுத்தியுள்ளோம் . விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய கடற்படை அக்னிப்பாதை திட்டம் - 2022 :
இந்திய கடற்படைக்கு அக்னி வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறை ஜூலை 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இளைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்களின் வயது 17 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். கடற்படையில் அக்னி எஸ்எஸ்ஆர் பணி பிரிவுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 12ஆம் வகுப்பும் வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படை அக்னி எம்ஆர் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
Agnipath Recruitment 2022 : இந்திய விமான படையில் பணியாற்ற விருப்பமா? எப்படி விண்ணப்பிப்பது? விவரங்கள் இங்கே
ஐபிபிஎஸ் கிளார்க் பணி நியமனம் :
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,035 கிளார்க் பணியிடங்களுக்கு ஐபிபிஎஸ் அமைப்பு தேர்வு நடத்துகிறது. ஜூலை 21ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். வயது தகுதி 20 முதல் 28 ஆகும். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பல்லடுக்கு தேர்வு முறை மற்றும் ஆன்லைன் முதல்நிலை தேர்வு மூலமாக பணி நியமனம் நடைபெறும்.
IPBS: 7000க்கும் மேற்பட்ட எழுத்தர் காலியிடங்கள், மிகப்பெரிய பணிச் சேர்க்கையைத் தொடங்கிய ஐபிபிஎஸ்
நவோதயா பள்ளி :
நவோதயா பள்ளிகளில் முதல்வர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நியமனம் நடைபெறுகிறது. ஜூலை 22ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டரில் திறனறிவு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவணங்களின் சரிபார்ப்புக்கு பிறகு நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை... B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவ பணி நியமனம் 2022 :
சமையலர், காவலர், முடிதிருத்துநர், தோட்ட பராமரிப்பாளர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பிரிவுகளில் 458 பணிக்கு இந்திய பாதுகாப்பு படை ஆள் தேர்வு செய்கிறது. விண்ணப்பதாரர்கள் பணி நியமன விளம்பரம் வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 18 முதல் 25 வயதுடையவராக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், சில பணிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும் கட்டாயம் ஆகும்.
3552 காலி இடங்களுக்கான காவலர்கள்/சிறைக் காவலர்கள் ஆள் சேர்ப்பு - ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்
ஐசிஎஃப் : ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 876 பணியிடங்கள் அப்ரண்டீஸ் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளன. ஃபிட்டர், வெல்டர், பெயிண்டர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது ஐடிஐ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு 2022 :
மாநில காவல் துறையில் காலியாக உள்ள 3,552 பணிகளுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் நியமன வாரியம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூலை 7ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரையிலான இளைஞர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது 10ஆம் வகுப்பு எழுத இருப்பவராக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உடற்தகுதி, உடல் போட்டி தேர்வு போன்றவற்றின் மூலம் நியமனம் நடைபெறும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.