ஐபிபிஎஸ் எழுத்தர் (Clerk) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை
சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 6,035 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு (இது முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்க மட்டும் நடைபெறும்) முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக அமையும்.
இதையும் வாசிக்க: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Study Circles) மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் IBPS- தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 05.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது.
இதையும் வாசிக்க: கலை/அறிவியில் படிப்புகளில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் 9597557913 என்ற வாட்ஸ் அப் (Whatspp) எண்ணிற்கு தங்களது பெயர் கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பிற்கு வருகை தரும் தேர்வர்கள் தங்களது IBPS தேர்வுக்கான விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வரவேண்டும்.
மேலும் இப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்க்கான தகுதியும், அனுபவமும் மற்றும் விருப்பமும் உள்ள பாட வல்லுநர்கள் மேற்படி தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். அவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய 044-22501032 எண்ணை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி peeochn@gmail.com.
என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.