ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய உணவுக் கழகத்தில் 113 மேனஜர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

இந்திய உணவுக் கழகத்தில் 113 மேனஜர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

fci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டுமே  விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நாளை மாலை 6 மணிக்கு பிறகு  விண்ணப்ப சேவை முற்றிலும் நிறுத்தப்படும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  MANAGERS IN FCI:  எலெக்ட்ரிக்கல், இந்தி, உணவு தானிய கிடங்குகள், பொது நிர்வாகம், சிவில், மெக்கானிக்கல் என பல்வேறு துறைகளில் உள்ள மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு இந்திய உணவுக் கழகம்  விண்ணப்பங்களை பெற்று வருகிறது. விண்ணப்பம் செய்வதற்கு நாளையே இறுதி நாள் என்பதால், தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  புதுடெல்லியில்  அமைந்துள்ள இந்திய உணவுக் கழகத்தின் தலைமையகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள அதன் அலுவலகங்களில் இந்த  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  விண்ணப்பம் செய்வது எப்படி? 

  https://fci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டுமே  விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நாளை மாலை 6 மணிக்கு பிறகு  விண்ணப்ப சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.

  தெற்கு மண்டல பணி விவரங்கள்

  கல்வித் தகுதி: பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட  தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இந்தி துறையில் உள்ள பதவிக்கு முதுகலைப் பட்டம் கோரப்பட்டிருக்கிறது. மேலும், விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆள்சேர்க்கை அறிவிப்பை படிக்கவும்.

  விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.800ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

  தெரிவு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல், பயிற்சி என மூன்று நிலையில் தெரிவு நடைபெறும். இந்தி துறை பணிக்கு பயிற்சி நிலை தேர்வு கிடையாது.

  இதையும் வாசிக்கநாமக்கல் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிசியன் வேலை: விவரம் உள்ளே

  வயது வரம்பு: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இந்தி துறைக்கு மட்டுமே அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுளளது.  அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

  MANAGERS IN FCI

  விண்ணப்பம் சமர்ப்பிக்க 

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job, Recruitment