முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலியிடங்கள்: முழு விவரம் உள்ளே

இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலியிடங்கள்: முழு விவரம் உள்ளே

காட்சிப் படம்

காட்சிப் படம்

இளநிலை பொறியியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  -

காலியிடங்கள்: 5043

முக்கியமான நாட்கள்: 

விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 06.09.2022 காலை 10 மணி முதல்

சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 05.10.2022 மாலை 4 மணி வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  பின்னர் வெளியிடப்படும்.

பொது நிபந்தனைகள்:  நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 6 (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு) மண்டலங்களில் இந்த ஆள் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும், இளநிலை பொறியியாளர் சிவில் (A);

இளநிலை பொறியியாளர் - எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் (B); சுருக்கெழுத்தாளர் நிலை- 2 (C); உதவியாளர்  நிலை III - பொது (D); உதவியாளர் நிலை III- கணக்கு (E); உதவியாளர் நிலை III - டெக்கினிக்கல் (F);  உதவியாளர் நிலை III- உணவு தானிய கிடங்குகள்  (G);  உதவியாளர் நிலை III (இந்தி) - H ஆகிய பதிவுகள் நிரப்பப்பட உள்ளன.

தென் மண்டலத்தில் 989 காலியிடங்கள்

டெல்லி,பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டத்தில் 2388 காலியிடங்களும்;  தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டத்தில் 989 காலியிடங்களும்; பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 768 காலியிடடங்களும்; குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 713 காலியிடங்களும்; அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில் 185 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு காலிப்பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இளநிலை பொறியியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். உதவியாளர் நிலை-III பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

இதையும் வாசிக்கTET Exam : டெட் முதல் தாள் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கல்வி: உதவியாளர் நிலை- III பொது & உணவுத் தானிய கிடங்குகள் பதவிக்கும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கும் உயர்கல்வியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்  விண்ணப்பிக்க கட்டணம்  செலுத்த வேண்டியதில்லை.

தெரிவு செய்யப்படும் முறை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  

அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய:  ZONE-WISE RECRUITMENT OF NON-EXECUTIVES IN FCI

First published:

Tags: Recruitment