ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

ராமதாஸ்

ராமதாஸ்

Tamil Nadu Old Pension Scheme: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையெல்லாம் முறியடித்து இராஜஸ்தான்,சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப்,மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்துள்ளன.

தற்போது, இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாச்சல பிரதேசம் மாநிலம் சேர இருக்கிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் காங்கிரஸ் கட்சி  மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் என்று முதலவர் சுக்விந்தர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த இரு வாரங்களுக்குள் இமாலய பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

 இதையும் வாசிக்கஅரசு வேலை உங்கள் கனவா? - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!  

தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த எந்த கட்சியும் அதை செயல்படுத்துவதில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை.

அதன்பின் 03.08.2017-ஆம் தேதி மூத்த இ.ஆ.ப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் ஏன் செயல்படுத்த முடியாது?

இதையும் வாசிக்க: இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நீங்களும் தன்னார்வலராக சேரலாம்... பதிவு செய்வது எப்படி?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்து விட்டது. இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.''எனத் தெரிவித்துள்ளார்.

First published: