• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • பார்ட் டைம் வேலை தேடுபவர்களுக்காக Flipkart Xtra-வை அறிமுகம் செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம்!

பார்ட் டைம் வேலை தேடுபவர்களுக்காக Flipkart Xtra-வை அறிமுகம் செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம்!

ஃபிளிப்கார்ட்  நிறுவனம்

ஃபிளிப்கார்ட் நிறுவனம்

ஃபிளிப்கார்ட் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

  • Share this:
ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்காக ஆண்டுதோறும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், பிக் பில்லியன் டேஸ் என்ற மாபெரும் தள்ளுபடி திருவிழாவை நடத்தி வருகிறது. அக்டோபர் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு "ஃபிளிப்கார்ட்ஸ் பிக் பில்லியன் டேஸ் சேல்" (Flipkart's Big Billion Days 2021 sale) திருவிழா நடைபெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளதால் கேட்ஜெட்ஸ்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஃபேஷன் அக்சஸரீஸ்கள் என எண்ணற்ற பொருட்களை வழக்கத்தை விட குறைந்த விலையில் வாங்க மக்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே தனிநபர்கள், சர்வீஸ் ஏஜென்சிகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு நெகிழ்வான வருவாய் வாய்ப்புகளை வழங்க 'Flipkart Xtra' என்னும் செப்பரேட் மார்க்கெட் பிளேஸ் மாடலை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் ஃபிளிப்கார்ட் அறிவித்தது. மேலும் இதற்காக கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 'Flipkart Xtra' ஆப் மூலம், ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு எளிமையான மற்றும் தடையற்ற ஆன் போர்டிங் அனுபவத்தை ஃப்ளிப்கார்ட் வழங்கும் என தெரிகிறது. Flipkart Xtra மூலம் விண்ணப்பிக்கும் தனிநபர்களின் பின்னணி விவரங்கள் சரி பார்க்கப்பட்டு அவரவர் தகுதிக்கு ஏற்ப டெலிவரி ஏஜென்ட்ஸ், சர்வீஸ் பார்ட்னர்ஸ், டெக்னீஷியன்ஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ஃபிளிப்கார்ட் கூறி இருக்கிறது.

பிக் பில்லியன் டேஸ் அதனை தொடர்ந்து வரும் பண்டிகை சீசன் ஆகியவற்றை முன்னிட்டு ஆன்லைனில் ஆர்டர்கள் குவியும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல தடையற்ற சேவைகளை வழங்க இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஃபிளிப்கார்ட்டிடம் இருந்து வந்துள்ளது. ஃபிளிப்கார்ட்டின் இந்த பார்ட் டைம் வேலைவாய்ப்பை பெற நினைக்கும் தனிநபர்கள், தங்களது ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் இருக்கும் பிளே ஸ்டோரிலிருந்து Flipkart Xtra ஆப்-பை டவுன்லோட் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் தகவல்களைப் பகிரவும், பின்னணியை சரிபார்க்க ஏதுவாக அவர்களின் அடையாள சான்றை (ID proof) அப்லோட் செய்யவும் Flipkart Xtra கேட்கும்.

ALSO READ |  ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்!

விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வெற்றிகரமாக சரி பார்க்கப்பட்ட பின் அவர்கள் ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த பார்ட் டைம் வேலை வாய்ப்புகளை பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள். தனி நபர்களுக்கான பகுதிநேர வாய்ப்புகளை உருவாக்கும் அதே நேரத்தில், இனி வரும் மாதங்களில் எண்ணற்ற ஆர்டர்கள் வரும் என்பதால் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் டெலிவரி , ஷிப்மென்ட்ஸ் மற்றும் சர்வீஸை உறுதி செய்ய தனது விநியோக சங்கிலியை ஃபிளிப்கார்ட் அதிகரித்து கொள்ள இந்நடவடிக்கை உதவுகிறது.

ஃபிளிப்கார்ட் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. Flipkart Xtra ஆப் தற்போது டெலிவரி எக்ஸிகியூட்டிவ்களுக்கான sign-ups-களை மட்டுமே அனுமதிக்கிறது. பார்ட் டைம் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு சேரும் தனிநபர்களுக்கு கிடைக்கும் துல்லி வருவாய் பற்றிய தகவ்களை இன்னும் ஃபிளிப்கார்ட் வெளிப்படுத்தவில்லை. இது தவிர பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர் விசாரணைகளை நிர்வகிக்கவும், அவர்களுக்கு உதவி செய்ய கான்டாக்ட் சென்டர்களின் திறனை அதிகரிக்க சுமார் 2,700 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: